உலக வில்வித்தை போட்டி: தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு


உலக வில்வித்தை போட்டி: தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 5 Aug 2023 8:19 AM GMT (Updated: 5 Aug 2023 8:26 AM GMT)

உலக வில்வித்தை போட்டியில் நாட்டிற்கு முதல் தங்கம் பெற்றுத்தந்த வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின், பெர்லினில் நடந்து வருகிறது. இதில் கூட்டு பெண்கள் பிரிவின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்திய அணியான ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத் கவுர் ஆகியோர், மெக்சிகோ அணியான டாப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன், ஆண்ட்ரியா பெசெரா ஆகியோரை எதிர்கொண்டனர். இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் மூவரும் சிறப்பாக செயல்பட்டனர் . இதனால் 235 -229 என்ற புள்ளி கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி இந்திய அணியினர் தங்கம் வென்றனர்.

இந்தநிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இந்திய வீராங்கனைகள் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத் கவுர் ஆகியோர் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் நாட்டிற்கு முதல் தங்கத்தை தேடி தந்து மூவரும் சாதனை படைத்துள்ளனர். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம். எங்கள் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள்! வீராங்கனைகளின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் வெற்றிக்கு வழி வகுத்தது என கூறியுள்ளார்.


Next Story