கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு


கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
x

கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு, மே.24-

கர்நாடக மேல்-சபையில் எம்.எல்.ஏ.க்கள் மூலம் உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட 7 பேரின் பதவி காலம் அடுத்த மாதம்(ஜூன்) நிறைவடைகிறது. இதையொட்டி அந்த 7 இடங்களுக்கு வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை அக்கட்சி நேற்று இரவு அறிவித்தது. நாகராஜ் யாதவ், அப்துல் ஜப்பார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் 2 பேரும் எம்.எல்.சி.யாக தேர்ந்து எடுக்கப்படுவது உறுதி. பா.ஜனதாவுக்கு 4 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கின்றன. காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.


Next Story