விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்..!
விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளது
புதுடெல்லி,
விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளது.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், பிரதமர் இல்லத்தை முற்றுகையிடவும் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.போராட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story