ஜார்கண்டின் ராம்கரில் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை
ஜார்கண்டில் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம்கர்,
ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பிட்கா பவாரி என்பவர் பார்ககோன் எம்எல்ஏ அம்பா பிரசாத்தின் உதவியாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சவுந்தா பஸ்தியில் உள்ள பெட்ரோல் பங்கில் பவாரி இருந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
பின்னர் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பவாரி உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எம்எல்ஏ அம்பா பிரசாத் மற்றும் முன்னாள் அமைச்சர் யோகேந்திர ஷா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளனர்.