ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம்: காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைகார்கே, சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பு


ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம்: காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைகார்கே, சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பு
x

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் எதிர்த்து போராடுவோம் என கூறியது.மேலும், நேற்று மாலை ஏற்கனவே கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்திருந்த நிலையில், கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மாலை 6 மணிக்கு டெல்லியில் கட்சித் தலைமை அலுவலகத்தில் கூடி விவாதித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா, தாரிக் அன்வர், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், பவன்குமார் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது, ராகுல் காந்தியின் எம்.பி. பதவிநீக்கம், அதை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள், வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story