3 துணை முதல்-மந்திரிகளை நியமிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும்-மந்திரி ராமலிங்க ரெட்டி பேட்டி
பெங்களூருவில் நேற்று போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு:-
கர்நாடகத்தில் மேலும் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று மந்திரி ராஜண்ணா கூறி இருப்பது பற்றி கேள்விப்பட்டேன். நான் துணை முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இல்லை. காங்கிரஸ் கட்சி அனைத்து சமுதாயங்களுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறது. அதனால் மாநிலத்தில் மற்ற சமுதாயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்குவது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும்.
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த 165 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு இருந்தது. தற்போது 5 உத்தரவாத திட்டங்களில் 4 இலவச திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 135 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவது எங்களது(காங்கிரஸ் அரசு) கடமை மற்றும் பொறுப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.