மத்திய பிரதேசம்: பலாத்காரம், கொலை குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மறுப்பு


மத்திய பிரதேசம்:  பலாத்காரம், கொலை குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மறுப்பு
x
தினத்தந்தி 21 Nov 2022 6:53 PM IST (Updated: 21 Nov 2022 7:04 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது மனைவி போல் உடன் வாழ்ந்தவர்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றச்சாட்டு கூறியுள்ளார்.



போபால்,


மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் உமங் சிங்கார். இவர் மீது நாவ்காவன் காவல் நிலையத்தில் நேற்று மாலை பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரில், உமங்கின் மனைவி போல் அவர் உடன் வழ்ந்து வந்துள்ளார் என தெரிவித்து உள்ளார். தன்னை உமங் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எம்.எல்.ஏ. உமங் கூறும்போது, கடந்த 2-ந்தேதி அந்த பெண்ணுக்கு எதிராக போலீசில் புகார் அளித்து இருக்கிறேன். தன்னை மனரீதியாக துன்புறுத்தி, மிரட்டினார்.

என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்வேன் என அச்சுறுத்தியதுடன், ரூ.10 கோடி தரவேண்டும் என்று கேட்டு வற்புறுத்தினார் என உமங் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா கூறும்போது, முன்னாள் மந்திரி உமங்கின் மனைவி திருமணம் செய்கிறேன் என கூறி தன்னை உமங் பலாத்காரம் செய்து, மனரீதியாக துன்புறுத்தி உள்ளார் என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

உமங்கிற்கு கடந்த காலங்களில் வேறு சில மனைவிகளும் இருந்துள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என கூறி உள்ளார்.

1 More update

Next Story