தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீதான வழக்கு விசாரணைக்கு தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீதான வழக்கு விசாரணைக்கு தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ரிஸ்வான் ஹர்ஷத். இவர், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தொட்டனகுந்தியில் உள்ள கோவிலில் நடைபெற்ற ராமநவமியில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்த ரிஸ்வான் ஹர்ஷத் தனக்கு ஆதரவாக கோவிலில் வைத்து பிரசாரம் செய்ததாக கூறியும், முறையான அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாகவும் கூறி, அவர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. தன் மீதான வழக்கு மற்றும் விசாரணைக்கு தடை விதிக்கும்படியும், ரத்து செய்யவும் கோரி ரிஸ்வான் ஹர்ஷத் சார்பில் கர்நாடக ஐகோாட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சுனில்தத் யாதவ் முன்னிலயில் நடைபெற்றது. அப்போது ஐகோர்ட்டு அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை ரிஸ்வாத் ஹர்ஷத் மீதான தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் வழக்குக்கும், விசாரணைக்கும் தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதிக்கு ஒத்திவைதது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story