காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வயநாடு அலுவலகம் மீது தாக்குதல் - பினராயி விஜயன் கண்டனம்
கேரளாவின் வயநாடுவில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கட்சி அலுவலகம் வயநாடுவில் உள்ளது. இந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) நடத்தியதாக காங்கிரஸ் கட்சி தொிவித்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கேரள முதல்-மந்திாி பினராயி விஜயன் கண்டனம் தொிவித்து உள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவில், ''ராகுல் காந்தி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். நம் நாட்டில் ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உள்ளது. இருப்பினும், இது அதிகமாக இருக்கக்கூடாது. இது தவறான போக்கு. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''. இவ்வாறு அவா் பதிவிட்டுள்ளாா்.