ராகுல் காந்திக்காக நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர்- எதிர்க்கட்சிகள் மீது மத்திய மந்திரி விமர்சனம்


ராகுல் காந்திக்காக நாடாளுமன்றத்தை  நடத்த விடாமல் இடையூறு செய்தனர்- எதிர்க்கட்சிகள் மீது மத்திய மந்திரி விமர்சனம்
x

ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாராளுமன்ற முடக்கம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:- ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். கடைசி நாளிலும் அவையை சீர்குலைத்தனர். கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்தனர்.

நாடாளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஒரு எம்.பி. ராகுல் காந்திக்காக, காங்கிரசும், அவர்களின் ஆதரவாளர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசும் அதன் கும்பல்களும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சூரத் நீதிமன்றத்திற்கு எப்படி சென்றார்கள் என்பதை நாம் பார்த்தோம். அவர்கள் ஊர்வலம் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story