வி.சோமண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் புதிய திட்டம்


வி.சோமண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் புதிய திட்டம்
x

வி.சோமண்ணாவை வீழ்த்த காங்கிரஸ் புதிய திட்டம் வகுத்துள்ளது.

பெங்களூரு:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியும், தற்போது எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வருணா தொகுதியில் களம் காண்கிறார். அவரை எதிர்த்து பா.ஜனதாவின் மூத்த தலைவரும், வீட்டு வசதி துறை மந்திரியுமான வி.சோமண்ணா போட்டியிட உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு கோவிந்தராஜ்நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வி.சோமண்ணாவுக்கு இந்த முறை பா.ஜனதா சாம்ராஜ்நகர் தொகுதியையும், வருணா தொகுதியையும் ஒதுக்கி உள்ளது. சித்தராமையாவுக்கு எதிரான வலுவான வேட்பாளரை களம் நிறுத்தி அவருக்கு குடைச்சல் கொடுக்கவும், அவரை வருணா தொகுதியிலேயே முடக்கவும் பா.ஜனதா வியூகம் வகுத்து இருக்கிறது. ஆனால் வருணா தொகுதியில் சித்தராமையா கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவார் என்றும், அதனால் வி.சோமண்ணாவை சாம்ராஜ்நகர் தொகுதியிலேயே முடக்கி அவரை தோற்கடிக்க வேண்டும் என்றும் சாம்ராஜ்நகர் மாவட்ட காங்கிரசார் திட்டம் தீட்டி வருகிறார்கள். அதற்காக தற்போது சாம்ராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் நிறுத்தப்பட்டு இருக்கும் புட்டரங்கஷெட்டியின் வெற்றிக்காக காங்கிரசார் இப்போதிருந்தே கடுமையாக உழைத்து வருகிறார்கள். இதனால் வி.சோமண்ணா 2 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறிப்பாரா அல்லது காங்கிரசின் கை ஓங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Next Story