தெலுங்கானாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடங்கியது..!


தெலுங்கானாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடங்கியது..!
x

தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளியில் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது.

ஐதராபாத்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பிரிவினை அரசியல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக 'இந்திய ஒற்றமை பயணம்' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.

கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை கடந்த 23-ந்தேதி கர்நாடகாவில் இருந்து தெலுங்கானாவில் நுழைந்தது. தீபாவளி பண்டிகையொட்டி பாரத் ஜோடோ பாதயாத்திரை 3 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. அதன்பின், நேற்று முன்தினம் மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளியில் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம், தெலுங்கானாவில் 19 சட்டசபை தொகுதிகள், 7 நாடாளுமன்ற தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கி.மீ. தூரத்தை கடந்து அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி மராட்டியத்தில் நுழைய உள்ளது. முன்னதாக நவம்பர் 4-ந்தேதி யாத்திரைக்கு ஓய்வு விடப்படுகிறது.

தெலுங்கானாவில் இந்த பாதயாத்திரையின் போது பல்சமய வழிபாட்டுத்தலங்களுக்கு ராகுல் காந்தி சென்று வழிபாடு செய்கிறார். அத்துடன் அரசியல், விளையாட்டு, வர்த்தகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களையும் அவர் சந்தித்து பேசுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உளளன.


Next Story