அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம் நாளை நடக்கிறது


அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம் நாளை நடக்கிறது
x

கோப்புப்படம்

மும்பை, நாக்பூரில் அமலாக்கத்துறை அலுவலகம் முன் நாளை போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

மும்பை,

அமலாக்கத்துறை நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் சர்வாதிகாரபோக்கை கண்டித்து மும்பை, நாக்பூரில் அமலாக்கத்துறை அலுவலகம் முன் நாளை (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

இதுகுறித்து மாநில தலைவர் நானா படோலே கூறுகையில், " மோடி அரசு சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட சதித்திட்டம் தீட்டுகிறது. எனவே இதை கண்டித்து மும்பை, நாக்பூரில் அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் மந்திரிகள், தலைவர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க மத்திய அரசு முகமைகளை பயன்படுத்தி வருகிறது" என்றார்.

இதில் மும்பையில் நானா படோலே தலைமையிலும், நாக்பூரில் மின்சார துறை மந்திரி நிதின் ராவத் தலைமையிலும் போராட்டம் நடைபெற உள்ளது.


Next Story