பரிசு பொருட்கள் எடுத்து சென்றதாக காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வின் கார் பறிமுதல்


பரிசு பொருட்கள் எடுத்து சென்றதாக காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வின் கார் பறிமுதல்
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரிசு பொருட்கள் எடுத்து சென்றதாக காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வின் கார் பறிமுதல்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், பெங்களூரு திலக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சவுமியா ரெட்டியின் காரிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அந்த காரில் சேலைகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுமியா ரெட்டியின் காரை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். இதுகுறித்து திலக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story