விநாயகா் சதுர்த்தியையொட்டி பெங்களூரு-உப்பள்ளி ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


விநாயகா் சதுர்த்தியையொட்டி பெங்களூரு-உப்பள்ளி ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
x
தினத்தந்தி 9 Sep 2023 6:45 PM GMT (Updated: 9 Sep 2023 6:45 PM GMT)

விநாயகா் சதுர்த்தியையொட்டி பெங்களூரு-உப்பள்ளி ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் சில ரெயில்கள் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

* எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-கே.எஸ்.ஆர். பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்: 07339) வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை படுக்கை வசதி கொண்ட 3 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (07340) வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை படுக்கை வசதி கொண்ட 3 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-கே.எஸ்.ஆர். பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் (12079/80) வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இருக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

* யஸ்வந்தபுரம்-வாஸ்கோடகாமா தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (17309) வருகிற 14-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை ஏ.சி. வசதி கொண்ட மூன்று அடுக்கு பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

* வாஸ்கோடகாமா-யஸ்வந்தபுரம் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (17310) வருகிற 13-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை ஏ.சி. வசதி கொண்ட மூன்று அடுக்கு பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story