புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் பணி சீரான வேகத்தில் நடைபெற்று வருகிறது - மத்திய மந்திரி ஹர்தீப் பூரி


புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் பணி சீரான வேகத்தில் நடைபெற்று வருகிறது - மத்திய மந்திரி ஹர்தீப் பூரி
x

புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் பூரி இன்று பார்வையிட்டார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த 2020 -ஆண்டு டிசம்பர் மாதம் புதிய பாராளுமன்றத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த ஆகஸ்ட் மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அவர் திறந்து வைத்தார்.

தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் பூரி இன்று பார்வையிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் இன்று ஆய்வு செய்யப்பட்டன. பணிகள் சீரான வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பண்டைய கலாச்சார பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட கட்டிடக்கலை கூறுகளுடன் கூடிய நிலையான நவீன கட்டிடமாகும். நவீனம் பாரம்பரியத்தை சந்திக்கிறது" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story