ஒரே தொகுதியில் 10-வது முறையாக அரக ஞானேந்திரா போட்டி


ஒரே தொகுதியில் 10-வது முறையாக அரக ஞானேந்திரா போட்டி
x

ஒரே தொகுதியில் 10-வது முறையாக அரக ஞானேந்திரா போட்டியிடுகிறார்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் பா.ஜனதாவில் இருந்து முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் விலகி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இதுகுறித்து மந்திரி அரக ஞானேந்திராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், பா.ஜனதா கட்சியின் கொள்கை, விதிமுறைகளை பின்பற்றுபவர்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள். கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து நான் ஒரே தொகுதியில், பா.ஜனதா கட்சியில் இருந்தே போட்டியிட்டு வருகிறேன். இதுவரை 9 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 10-வது முறையாக தற்போது தீர்த்தஹள்ளி தொகுதியில் போட்டியிட உள்ளேன். இது என்னுடைய கடைசி தேர்தல் ஆகும் என்றார்.


Next Story