தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!


தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
x

தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றத்தின் நிகழ்வுகள் 12-வது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி பதவி பறிக்கப்பட்டத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து அமளியில் ஈடுபட்டனர்.


Next Story