இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
x

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி நேற்று பதிவானது.

இந்த நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3094- ஆக பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15,208- ஆக உயரந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,390 ஆக உள்ளது.


Next Story