கர்நாடகத்தில் புதிதாக 525 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 525 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 22 ஆயிரத்து 673 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 525 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 494 பேருக்கும், பல்லாரியில் 4 பேருக்கும், மைசூருவில் 8 பேருக்கும், உடுப்பியில் 3 பேருக்கும், பெலகாவி, ஹாசன், சித்ரதுர்காவில் தலா 2 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 7 பேருக்கும், பெங்களூரு புறநகர், சிக்கமகளூரு, தார்வாரில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 228 பேர் குணம் அடைந்தனர். மருத்துவ சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3,177 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 2.31 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500-ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதாரத்துறைக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.