இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வேகமாக குறையத் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. தொற்று பாதிப்பு நேற்று 2,961 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு 2,380 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 69 ஆயிரத்து 630 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,188 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 10 ஆயிரத்து 738 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி ஆஸ்பத்திரிகளில் 27,212 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று 15 பேர், கேரளாவில் விடுபட்ட 6 மரணங்கள் என மேலும் 21 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 680 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story