பீகார் சிறையில் 37 கைதிகளுக்கு கொரோனா


பீகார் சிறையில் 37 கைதிகளுக்கு கொரோனா
x

கோப்புப்படம்

பீகார் சிறையில் 37 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

பாட்னா,

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதற்கிடையே பீகார் மாநில தலைநகர் பாட்னா அருகேவுள்ள பியுர் மத்திய சிறையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ. ரன்வீர் யாதவ் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து சிறையில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் தெரியவந்தது. இதில் 37 கைதிகளுக்கு கொரோனா இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் சிறையில் உள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சிறை சூப்பிரண்டு ஜிதேந்திரகுமார் தெரிவித்தார்.


Next Story