காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா
மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு (வயது 73) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு (வயது 73) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவரே ஒரு டுவிட்டர் பதிவில் நேற்று தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், "இன்று எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. வீட்டில் என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்" என கூறி உள்ளார். ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் குலாம் நபி ஆசாத், விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story