மராட்டிய முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி


மராட்டிய முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.



புனே,



மராட்டியத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் தேவேந்திர பட்னாவிஸ். பா.ஜ.க.வை சேர்ந்த இவர் மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும், கட்சி நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அந்த தகவலில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டேன். மருத்துவரின் அறிவுறுத்தலின்படி, மருந்து மற்றும் சிகிச்சைகளை எடுத்து வருகிறேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனைகளை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சமீப நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

மராட்டியத்தின் மும்பை நகரில் 889 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கு முந்தின தினம் 763 ஆக இருந்தது.

கடந்த பிப்ரவரி 4ந்தேதி 846 ஆக தொற்று எண்ணிக்கை இருந்தது. அதன்பின்னர் சரிவடைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.




Next Story