கேரளாவில்தான் ஊழல் அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.: பினராயி விஜயன்
நிலையான வளர்ச்சிக்கு ஊழலற்ற நிர்வாகம் அவசியம் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
நிலையான வளர்ச்சிக்கு ஊழலற்ற நிர்வாகம் அவசியம் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் நடைபெற்ற ஊழலற்ற கேரளா என்ற பிரசார இயக்கத்தை பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன் கூறியதாவது; "ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு ஊழலற்ற நிர்வாகம் மிகவும் முக்கியம்.
இதை கருத்தில் கொண்டு கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக தென் மாநிலங்களிலேயே கேரளாவில்தான் ஊழல் அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில ஊழல் சம்பவங்கள் இருந்தாலும் கேரளாவில் ஊழல் மிகப் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது நாட்டிலேயே ஊழல் குறைந்த மாநிலம் என்ற பெருமை கேரளாவிற்கு உள்ளது" என்றார்.
Related Tags :
Next Story