கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது; ரேவண்ணா எம்.எல்.ஏ. தாக்கு


கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது;  ரேவண்ணா எம்.எல்.ஏ. தாக்கு
x

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என ரேவண்ணா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

ஹாசன்;


முன்னாள் மந்திரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சி மூத்த தலைவருமான எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான், ஹாசனில் ஆசியாவிலேயே நம்பர்-1 பஸ் நிலையத்தை ஏற்படுத்தினேன். அப்போதே பஸ் நிலையம் அருகே 4 வழிச்சாலை ஏற்படுத்தி கொடுத்தேன். ஹாசனில் மாதிரி மருத்துவமனை, ஐகோர்ட்டு மாதிரி ஹாசன் மாவட்ட கோர்ட்டு அமைத்து கொடுத்தது யார்?.

தற்போது உள்ள எம்.எல்.ஏ.வுக்கு சித்தாந்தம் என்ன என்பது தெரியவில்லை. மாநிலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் முறையாக நடைபெறவில்லை. எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு பொறுப்பு இல்லாமல் செயல்படுகிறது. ஒரு வேலை பொறுப்பு இருந்திருந்தால் மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து மற்றும் மாநகராட்சி தேர்தல் நடத்தியிருக்கவேண்டும்.

ஆனால் தேர்தல் நடத்தாமல் அனைத்தையும் தங்கள் கைக்குள் வைத்து கொண்டு பணம் சம்பாதித்து வருகின்றனர். இதை பார்க்கும்போது அரசின் குறிக்கோள் பணமாகத்தான் உள்ளது. கடவுள் இவர்கள் அனைவருக்கும் ஞானம் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் தண்டனை கொடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story