இந்திய ஒற்றுமை பயணத்தில்....நேருவாக மாறி சிறுமியிடம் பாச மழை பொழிந்த ராகுல்காந்தி...!


இந்திய ஒற்றுமை பயணத்தில்....நேருவாக மாறி சிறுமியிடம் பாச மழை பொழிந்த ராகுல்காந்தி...!
x
தினத்தந்தி 29 Sept 2022 11:02 AM IST (Updated: 29 Sept 2022 2:04 PM IST)
t-max-icont-min-icon

இப்படியொரு அற்புத தருணத்திற்காக பல ஆயிரம் மைல்கள் கூட நடப்பேன் என ராகுல்காந்தி கூறியதையடுத்து சிறுமி ஒருவர் வாயடைத்து போனார்.


திருவனந்தபுரம்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கேரளாவில் நடந்து வருகிறது. இந்தநிலையில் தனது ஒற்றுமை பயணத்தில் மக்களுடன் உரையாடும் போது, பாரத்ஜோடோ யாத்திரையின் போது கேரள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்த போது ராகுல் காந்தி கூறியதாவது:-

நீங்கள் எழுப்பிய இந்தப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.

கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை பெரும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு.ஆனால் அதே சமயம் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கடன்களை திரும்ப கட்டவில்லை எனில் அவர்களை கடன்கார்கள் என்று முத்திரை பதித்து சிறையில் தள்ளுகிறது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காங்கிரசின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது கேரளாவில் நடைபயணத்தின் போது சிறுமி ஒருவரைச் சந்தித்தது குறித்தும் சிறுமியை கையில் தூக்கிய புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.


Next Story