இந்தியாவில் மேலும் 756 பேருக்கு கொரோனா- ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு


இந்தியாவில் மேலும் 756 பேருக்கு கொரோனா- ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 756- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 756 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் ஒரே நாளில் 8 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கோவிட் 19 என்ற கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது சற்று அடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு பெரிய அளவில் தற்போது இல்லை.

எனினும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 756 ஆக குறைந்துள்ளது. இதுவரை 4,49,85,705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை இன்று 4,49,86,461 ஆக அதிகரித்துள்ளது.


Next Story