இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!


இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!
x

கடந்த 24 மணி நேரத்தில் 2,513 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

புதுடெல்லி,

நாட்டில் சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 4,518 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,714 பேருக்கு தொற்று உறுதியானது.

நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 976 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,513 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.இந்தியாவில் நேற்று மட்டும் 13,96,169 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும், மொத்தம் 194 கோடியே 27 லட்சத்து 16 ஆயிரத்து 543 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

1 More update

Related Tags :
Next Story