பத்ரிநாத் நெடுஞ்சாலைகளிலும் திடீர் விரிசல்கள்...அச்சத்தில் மக்கள், யாத்ரீகர்கள்...!


பத்ரிநாத் நெடுஞ்சாலைகளிலும் திடீர் விரிசல்கள்...அச்சத்தில் மக்கள், யாத்ரீகர்கள்...!
x

இதுதான் இந்திய - சீன எல்லையோரம் அமைந்திருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமாகும்.

பத்ர்நாத்,

மக்கள் குடியேற்றம், தொழில் வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு, சாலை அமைத்தல், அணைகள் கட்டுதல், நீர்மின்நிலையங்கள் அமைத்தல், அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்துதல் என்ற பெயரில் உலகில் பல நாடுகளிலும் காடுகள், மலைகள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. நாட்டில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த வசதிகளையெல்லாம் ஏற்படுத்தவேண்டிய கட்டாய நிலை உள்ளது. விரைவான போக்குவரத்துக்கு தரமான சாலைகளும், உணவு உற்பத்தியை பெருக்க புதிய அணைகளும், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சார தேவையை பூர்த்தி செய்ய மின்உற்பத்தி நிலையங்களும் மிகவும் அவசியமானவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இவற்றையெல்லாம் உருவாக்க எந்த அளவுக்கு இயற்கையை அழிக்கிறோம் என்பதுதான் முக்கியம். நம் நாட்டில், குறிப்பாக மலைப்பிரதேசங்களில் கண்மூடித்தனமாக கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவை முழுமையாக பின்பற்றப்படுவது இல்லை. நீதிமன்றங்கள் எத்தனை முறை கண்டித்தாலும் உரிய பலன் இல்லை.

மலைப்பிரதேசங்கள் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதிகள் என்றபோதிலும், சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு அங்கு அதிக அளவில் தங்கும் விடுதிகள், சொகுசு ஓட்டல்கள் கட்டப்படுகின்றன. புற்றீசல் போல குடியிருப்புகளும் பெருகுகின்றன. சமவெளி பகுதியைப் போல் மலைப்பகுதியையும் கருதிக்கொண்டு அங்கு இஷ்டம் போல் கட்டுமானங்களை மேற்கொள்வது ஆபத்துக்கு வழிவகுக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் 'ஜோஷிமத் பூமி வெடிப்பு'. மலைப்பகுதியின் இயற்கை வளத்தை அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கினால் அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்ற பாடத்தை ஜோஷிமத் புகட்டி இருக்கிறது.

இமயமலையின் இயற்கை எழில் சூழ்ந்த உத்தரகாண்டில் ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதர்நாத், ஹரித்துவார், ஹேமகுந்த் சாகிப் போன்ற ஏராளமான புனிதத்தலங்கள் உள்ளதால் இதை 'தேவ பூமி' என்று அழைக்கிறார்கள். நைனிடால், முசோரி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களும் உள்ளன. இதனால் இங்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.

ஜோஷிமத் விவகாரம் தொடர்பாக பல்வேறு துறையினரும் ஆய்வுகளை நடத்தி வரும் நிலையில், பத்திநாத் தேசிய நெடுஞ்சாலையிலும் விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையிலும் விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது.இந்த ஒரே பாதை தான் பத்ரிநாத் மற்றும் மனா பகுதிகளுக்கு செல்லும் வழியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இதுதான் இந்திய - சீன எல்லையோரம் அமைந்திருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமாகும்.பத்ரிநாத் நெடுஞ்சாலைகளில் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

எனினும், இது மழை மற்றும் பனிக்காலங்களில் வழக்கமாக ஏற்படுவது தான் என்றும் கூறப்படுகிறது. சாலையின் நிலப்பரப்பு சற்று தளர்வாக இருப்பதால் இந்த விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மறுபக்கம், இதுபோன்ற சில அறிகுறிகள் ஜோஷிமத் பகுதியில் சிறிது காலத்துக்கு முன்பு நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.

வரும் நாட்களில் பனி மற்றும் மழை அதிகரித்தால், இந்த விரிசல்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பத்ரிநாத் கோவிலுக்கு 25 லட்சம் வாகனங்கள் இந்த சாலையைப் பயன்படுத்துவதாகவும், இது இப்பகுதிக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story