கிரகலட்சுமி திட்ட விழாவில் பங்கேற்க அலைமோதிய பெண்கள் கூட்டம்


கிரகலட்சுமி திட்ட விழாவில் பங்கேற்க அலைமோதிய பெண்கள் கூட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:45 PM GMT)

மைசூருவில் கிரகலட்சுமி திட்ட விழாவில் பங்கேற்க பெண்கள் கூட்டம் அலைமோதியது.

மைசூரு

உத்தரவாத திட்டங்கள்

காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்தநிலையில் தேர்தலின் போது அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை கூறியிருந்தது.

அதன்படி 3 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

4-வது திட்டமான இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் (கிரகலட்சுமி)30-ந்தேதி (நேற்று) தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

சாலையோரம் நின்று...

அதன்படி நேற்று கிரகலட்சுமி திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி எம்.பி,. முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிரகலட்சுமி திட்ட விழாவை மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்தார். இந்தநிலையில் கிரகலட்சுமி திட்ட விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பெண்கள் குவிந்தனர்.

கிரகலட்சுமி திட்ட விழாவுக்கு மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பெண்கள் அரசு பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்.

இந்தநிலையில் கிரகலட்சுமி திட்ட விழாவில் கூட்டம் நிரம்பியதால் ஏராளமானோர் விழா நடைபெறும் சாலையோரம் நின்றனர். அவர்கள் விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாமல் சாலையோரம் அமர்ந்திருந்தனர்.

பெண்கள் ஏமாற்றம்

பின்னர் விழா முடிந்ததும் அவர்கள் அரசு பஸ்களில் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கிரகலட்சுமி விழாவில் கலந்து கொள்ள வந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story