காஷ்மீர் முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


காஷ்மீர் முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x

கோப்புப்படம்

காஷ்மீர் முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீநகர்.

காஷ்மீரில் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிகாலையில் வீரர்கள் தங்கியிருந்த கூடாரம் ஒன்றில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது காவலராக பணிபுரிந்து வந்த அஜய் குமார் என்பவர் ரத்தவெள்ளத்தில் தரையில் சரிந்து கிடந்தது தெரிந்தது.

சக வீரர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஜய் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு அஜய் குமார் தற்கொலை செய்துகொண்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story