சி.யூ.இ.டி முதுகலை தேர்வு ஜூன் 5-ம் தேதி தொடக்கம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு


சி.யூ.இ.டி முதுகலை தேர்வு ஜூன் 5-ம் தேதி தொடக்கம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
x

சி.யூ.இ.டி முதுகலை தேர்வு ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் சி.யூ.இ.டி (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு முதுகலை படிப்புக்கான சி.யூ.இ.டி (கியூட்) தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சி.யூ.இ.டி முதுகலை தேர்வுகள் ஜூன் 5-ம் தேதி முதல் தொடங்குகிறது என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜூன் 5 முதல் 12 வரை அனைத்து நாட்களிலும் தேர்வுகள் நடைபெறும் என தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.nta.nic.in இல் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 5-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


Next Story