சி.யூ.இ.டி. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


சி.யூ.இ.டி. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
x

சி.யூ.இ.டி. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான சி.யூ.இ.டி.(CUET) எனப்படும் மத்திய பல்கலைகழகங்களுக்கான பொதுநுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

அந்த வகையில் வரும் கல்வியாண்டிற்கான சி.யூ.இ.டி. பொதுநுழைவுத் தேர்வு, கணிணி முறையில் ஜூலை மாத இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நடத்தப்படும் சி.யூ.இ.டி முதுகலை பட்டப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. https://cuet.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story