நடப்பாண்டு நேரடி வரி வசூல் ரூ.6.48 லட்சம் கோடி; மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்


நடப்பாண்டு நேரடி வரி வசூல் ரூ.6.48 லட்சம் கோடி; மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்
x

நடப்பாண்டில், கடந்த 8-ந்தேதி வரையிலான நிலவரப்படி ஒட்டுமொத்த நேரடி வரி வசூல் ரூ.6.48 லட்சம் கோடியாக உள்ளது.

சென்னை:

2022-23 நிதி ஆண்டில், கடந்த 8-ந்தேதி வரையிலான நிலவரப்படி ஒட்டுமொத்த நேரடி வரி வசூல் ரூ.6.48 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 35.46 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பாண்டு நேரடி வரி வசூல் நிலையான உயர்வை அடைந்து வருகிறது.

பெருநிறுவன வருமான வரி 25.95 சதவீதமும், தனிநபர் வருமான வரி 44.37 சதவீதமும் வளர்ச்சி விகிதத்தில் உள்ளது. திரும்ப செலுத்தத்தக்க தொகை கழித்தப்பிறகு, பெருநிறுவன வருமான வரியின் நிகர வளர்ச்சி 32.73 சதவீதம் ஆகவும், தனிநபர் வருமான வரி நிகர வளர்ச்சியின் 28.32 சதவீதம் ஆகவும் உள்ளது.

மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story