விபத்தின் போது சைரஸ் மிஸ்திரியின் கார் 140 கி.மீட்டர் வேகத்தில் சென்று இருக்கிறது; போலீசார் தகவல்


விபத்தின் போது சைரஸ் மிஸ்திரியின் கார் 140 கி.மீட்டர் வேகத்தில் சென்று இருக்கிறது; போலீசார் தகவல்
x

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54). இவர் நேற்று முன்தினம் மும்பை அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54). இவர் நேற்று முன்தினம் மும்பை அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு தொழில் அதிபர் ஜகாங்கிர் பண்டோலேவும் பலியானார். ஜகாங்கிர் பண்டோலேவின் சகோதரர் டாரியஸ் பண்டோலே (60), இவரது மனைவியான டாக்டர் அனகிதா (55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் குஜராத் மாநிலம் வாபி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் நேற்று மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். இதில் பெண் டாக்டருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது கணவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பிரபல தொழில் அதிபரான சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி உயர்மட்ட விசாரணைக்கும் மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, சைரஸ் மிஸ்திரி சென்ற சாலையில் 80 கி.மீட்டர் வேகம் தான் செல்ல வேண்டும் என்ற வேகக்கட்டுப்பாடு விதி உள்ளது. எனினும், இதற்கு இரு மடங்காக அதாவது மணிக்கு 130 -140 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. மித மிஞ்சிய வேகமும் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று மும்பையின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த விபத்து தொடர்பாக மெரிசிடஸ் பென்ஸ் நிறுவனத்திடம் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.


Related Tags :
Next Story