மராட்டியத்தில் தஹி ஹண்டி உற்சாக கொண்டாட்டம்


மராட்டியத்தில்  தஹி ஹண்டி உற்சாக கொண்டாட்டம்
x

மும்பையில் இன்று தஹி ஹண்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மும்பை,

நிதி தலைநகரான மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெறும் தஹி ஹண்டி என அழைக்கப்படும் தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தஹி ஹண்டி கொண்டாட்டம் பெரிய அளவில் நடைபெறவில்லை. நடப்பு ஆண்டு தஹி ஹண்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மும்பை, தானே பகுதிகளில் நடைபெற்ற தஹி ஹண்டி நிகழச்சிகளில் பங்கேற்ற கோவிந்தாக்கள் தயிர் பானைகளை உடைத்து அசத்தினர். மேலும் பரிசுகளை அள்ளி சென்றனர்.

தானே டெம்பி நாக்காவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சார்பில் பிரமாண்டமான தஹி ஹண்டி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கோவிந்தாக்கள் கலந்து கொண்டு மனித பிரமீடு அமைத்து அசத்தினர். குறிப்பாக கோவிந்தாக்கள் 9 அடுக்கு வரை பிரமீடு அமைத்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். மேலும் அவர்கள் பிரமீடை கலைக்க சீட்டு கட்டுபோல ஒரே நேரத்தில் சரிந்து விழும் காட்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்க விருந்தாக அமைந்தன. ஏக்நாத் ஷிண்டே ஏற்பாடு செய்து இருந்த நிகழச்சியில் நடிகை ஷரத்தா கபூர் கலந்து கொண்டு கோவிந்தாக்களை உற்சாகப்படுத்தினார்.


Next Story