மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 12,193 பேருக்கு தொற்று உறுதி


மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 12,193 பேருக்கு தொற்று உறுதி
x

கோப்புப்படம்

இந்தியாவில் நேற்று 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 12,193 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 12,193 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,69,684-லிருந்து 4,48,81,877 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,170 லிருந்து 67,556 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,258-லிருந்து 5,31,300 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 10,780 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று 10,765 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

1 More update

Next Story