இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,710 ஆக அதிகரிப்பு..!


இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,710 ஆக அதிகரிப்பு..!
x

இந்தியாவில் நேற்று 2,628 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 2,710 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,710 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 2,628 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,710 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,31,44,820 லிருந்து 4,31,47,530 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2,296 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,04,881 லிருந்து 4,26,07,177 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 14 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 5,24,539 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,414-லிருந்து 15,814 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 14,41,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 192.97 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story