தட்சிண கன்னடா, உடுப்பியை சேர்ந்தவர்கள் 3 பேர் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுக்கு தேர்வு


தட்சிண கன்னடா, உடுப்பியை சேர்ந்தவர்கள் 3 பேர் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுக்கு தேர்வு
x

அரசு சார்பில் வழங்கப்படும் 2022-ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர்களுக்கான விருதிற்கு தட்சிண கன்னடா, உடுப்பியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உடுப்பி;


சிறந்த ஆசிரியர்கள்

கர்நாடக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான (2022) சிறந்த ஆசிரியர்கள் விருதிற்கு தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் தகுதி பெற்ற ஆசிரியர்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

அதில் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியை சேர்ந்த அமிதானந்த ஹெக்டே, ராதாகிருஷ்ணா மற்றும் உடுப்பி மாவட்டம் கார்கலாவை சேர்ந்த சஞ்சீவ் தேவடிகா ஆகிய 3 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உஜ்ஜிரி பிளிகுஞ்சியில் வசித்து வரும் அமினாந்த ஹெக்டே பெல்தங்கடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

3 பேருக்கு விருது

இதேபோல ராதாகிருஷ்ணா என்பவர் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியை அடுத்த கொய்யூர் உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பெல்தங்கடி குட்டையாறு பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே மாவட்ட அளவிலான சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதேபோல சஞ்சீ்வ் தேவடிகா உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா மைனானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கார்கலா தாலுகா துர்கா நகரில் வசித்து வருகிறார். இவர்கள் 3 பேருக்கும் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story