பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்


பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 25 Aug 2023 3:33 PM IST (Updated: 25 Aug 2023 4:32 PM IST)
t-max-icont-min-icon

10ம் வகுப்பு மாணவன் பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி-பிஹ்ரோர் மாவட்டம் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த மாணவன் சச்சின்.

இதனிடையே, மாணவன் சச்சினுக்கு ஆசியர்கள் இருவர் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. விவேக் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் சச்சினை ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சக மாணவர்கள் மத்தியில் சச்சினை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், தேர்வில் தோல்வியடையவைத்து வாழ்க்கையை சீரழித்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. மேலும், சச்சினை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சல் அடைந்த மாணவன் சச்சின் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விசாரணையை தொடங்கிய போலீசார் மாணவனுக்கு ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேவேளை, மாணவன் சச்சின் தற்கொலை செய்யவில்லை ஆசிரியர்கள் கொலை செய்துவிட்டதாக கூறி கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும், இழப்பீடு வழங்கக்கோரியும் கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story