மிரட்டி பணம் பறித்த வழக்கு- தாவூத் இப்ராகிம் கூட்டாளி மும்பையில் கைது


மிரட்டி பணம் பறித்த வழக்கு-  தாவூத் இப்ராகிம் கூட்டாளி மும்பையில் கைது
x

மும்பை

மும்பை வெர்சோவா பகுதியை சேர்ந்த ஒருவரை தொழில் அதிபரும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியுமான ரியாஸ் பத்தி மற்றும் முகமது சலீம் ஆகியோர் மிரட்டி 30 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்தனர். இதுதொடர்பாக வெர்சோவா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் ரியாஸ் பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இதற்கு முன்பும் நில அபகரிப்பு, பணம் பறிப்பு போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story