மெட்ரோ ரெயிலில் பெண் பயணி முன் ஆபாச செயலில் ஈடுபட்ட ஆண் பயணி - அதிர்ச்சி சம்பவம்
மெட்ரோ ரெயிலில் பெண் பயணி அருகில் இருக்க ஆண் பயணி ஆபாச செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி,
டெல்லி மெட்ரோ ரெயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணித்த ஆண் பயணி ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மெட்ரோ ரெயிலில் பெண் பயணி அருகே அமர்ந்திருந்த அந்த ஆண் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டு சுய இன்பம் அனுபவித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சக பயணிகள் அருகே இருக்க அந்த ஆண் பயணி ஆபாச செயலில் ஈடுபட்டதை அருகில் இருந்த பயணிகள் படமெடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மெட்ரோ ரெயிலில் ஆபாச செயலில் ஈடுபட்ட அந்த ஆண் பயணியை கைது செய்யவேண்டும் என்று டெல்லி பெண்கள் ஆணைய தலைவி சுவாதி டெல்லி போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story