ஓட்டல் ஊழியர்களுக்கு 'தொற்றுநோய் இல்லை' சான்றிதழ் கட்டாயம் - கேரள அரசு அதிரடி


ஓட்டல் ஊழியர்களுக்கு தொற்றுநோய் இல்லை சான்றிதழ் கட்டாயம் - கேரள அரசு அதிரடி
x

ஓட்டல் ஊழியர்கள் ‘தொற்றுநோய் இல்லை’ என்கிற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில், உணவில் நச்சுத்தன்மை காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதை கருத்தில்கொண்டு, கேரள அரசு இ்ன்று முதல் 'சுகாதார அட்டை' என்ற திட்டத்தை அமல்படுத்துகிறது. இதன்படி, கேரளாவில் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள், சமையல் நிறுவனங்கள், உணவு வினியோக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு தொற்றுநோயோ, வெட்டுக்காயமோ இல்லை என்று டாக்டரிடம் சான்றிதழ் பெற்று வைத்திருப்பது கட்டாயம் ஆகும்.

அந்த சான்றிதழ்களை அவர்கள் பணியாற்றும் நிறுவனம் தன் கைவசம் வைத்திருக்க வேண்டும். சுகாதார அட்டை எனப்படும் அந்த சான்றிதழ் வைத்திருப்பது இன்று முதல் கட்டாயம் ஆகிறது.

மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும், சுகாதார ஆய்வாளர்களும் திடீர் திடீரென ஓட்டல்களில் சோதனை நடத்தி, அந்த சான்றிதழ் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய உள்ளனர். சான்றிதழ் இல்லாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

1 More update

Next Story