தென் ஆப்பிரிக்க சிறுத்தைகள் உயிரிழப்பு.. இந்தியாவின் முயற்சி தோல்வியாகிறதா?


தென் ஆப்பிரிக்க சிறுத்தைகள் உயிரிழப்பு.. இந்தியாவின் முயற்சி தோல்வியாகிறதா?
x
தினத்தந்தி 26 May 2023 3:52 AM GMT (Updated: 26 May 2023 6:04 AM GMT)

மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தன.

போபால்,

தென்னாப்பிரிக்காவில் இருந்து மத்தியப்பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு இந்த ஆண்டு பிப்ரவரியில் 11 சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன. இதில் ஜூவாலா என்று அழைக்கப்படும் பெண் சிறுத்தை, கடந்த மார்ச் மாதம் 4 குட்டிகளை ஈன்றது.

கடந்த 23ஆம் தேதி ஒரு சிறுத்தை குட்டி உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இரு சிறுத்தைக் குட்டிகள் இறந்தன. ஏற்கனவே மூன்று சிறுத்தைகள் மற்றும் ஒரு சிறுத்தை குட்டி என 4 சிறுத்தைகள் உயிரிழந்தன. பலவீனம் மற்றும் அதிகபட்ச வெப்பம் காரணமாக, இந்த சிறுத்தை குட்டிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.Next Story