ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக்குக்கு கொலை மிரட்டல்


ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக்குக்கு கொலை மிரட்டல்
x

ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக்குக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபருக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவராக இருந்து வருபவர் பிரமோத் முத்தாலிக். இவர், நேற்று முன்தினம் பெலகாவி மாவட்டம் ஹூக்கேரிக்கு சென்றிருந்தார். அபபோது பிரமோத் முத்தாலிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பேசிய அந்த நபர், பிரமோத் முத்தாலிக்கை குத்திக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். பின்னர் அந்த நபர் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரமோத் முத்தாலிக் ஹூக்கேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து நேற்று பிரமோத் முத்தாலிக் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் பெலகாவி மாவட்டம் ஹூக்கேரிக்கு சென்றிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் என்னை 5 முறை தொடர்பு கொண்டு ஒரு நபர் பேசினார். என்னை கத்தியால் குத்திக் கொலை செய்துவிடுவதாக அந்த நபர் உருது மறறும் கன்னட மொழியில் பேசி மிரட்டல் விடுத்தார். இதுபோன்று எனக்கு கொலை மிரட்டல் வருவது புதிது இல்லை. 15 ஆண்டாக கொலை மிரட்டல் வருகிறது. கொலை செய்து விடுவதாக மிரட்டும் நாடகத்தை கைவிடும்படி அந்த நபரை எச்சரித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story