கேரள குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு.!


கேரள குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு.!
x

குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குமாரி என்பவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.

மேலும், 52 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் தெரிவித்து இருந்தார்.

குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் என்ற நபர் போலீசில் சரணடைந்துள்ள நிலையில், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குமாரி என்பவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.


Next Story