பெங்களூருவில் 600 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க முடிவு; மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி


பெங்களூருவில் 600 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க முடிவு; மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
x

பெங்களூருவில் 600 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அதை இடித்து அகற்றுவது தொடர்பாக நோட்டீசை வருவாய்த்துறை அனுப்பியுள்ளது. பெங்களூருவில் 600 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க முடிவு செய்துள்ளோம். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.

கால்வாய்கள் வருவாய்த்துறைக்கு சேர்ந்தது. அது மாநகராட்சிக்கு சொந்தமானது அல்ல. ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன்பு அனைவருக்கும் முறைப்படி நோட்டீசு அனுப்பப்படுகிறது. சிலருக்கு மட்டுமே நோட்டீசு அனுப்பப்படுவதாக கூறுவது தவறு. பெங்களூருவில் 36 இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேறு ஒருவரின் இடத்தில் ஆய்வு நடத்த கோர்ட்டு அனுமதி தேவைப்படுகிறது. அதனால் கோர்ட்டுக்கு அவ்வப்போது தகவல்களை வழங்கி வருகிறோம். சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பகளை அகற்ற முன்கூட்டியே நோட்டீசு வழங்க தேவை இல்லை. ஆனால் குடியிருப்பு கட்டிடங்களை அகற்ற முன்கூட்டியே வருவாய்த்துறை நோட்டீசு அனுப்புகிறது.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.


Next Story