இனி 5 வகைகளாக தணிக்கை சான்றிதழ் வழங்க முடிவு!


இனி 5 வகைகளாக தணிக்கை சான்றிதழ் வழங்க முடிவு!
x

புதிய ஒளிப்பதிவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் யு, யு/ஏ, ஏ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது.இந்நிலையில் திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் இனி 5 பிரிவுகளாக வழங்கப்பட இருக்கிறது. அதாவது திரைப்பட தணிக்கை சான்றிதழ்களை 5 வகைகளாக பிரித்து வழங்கும் புதிய ஒளிப்பதிவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சட்டம் வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும் இந்த புதிய சட்டத்தின் படி திரைப்படத் தணிக்கை சான்றிதழ்கள் இனி யு, யு/ஏ, 7+, யு/ஏ, 13+, யு/ஏ, 16+, ஏ என 5 பிரிவுகளில் வழங்கப்படும்.


Next Story