ஷின்சோ அபே மரணம் வேதனை அளிக்கிறது: ராகுல் காந்தி


ஷின்சோ அபே  மரணம் வேதனை அளிக்கிறது: ராகுல் காந்தி
x

துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுடெல்லி,

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்டது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஷின்சோ அபேவை சுட்டுக்கொன்ற நபர் ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்லப்படுகிறது. வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் ஷின்சோ அபே மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஷின்சோ அபே மீது தனக்கு அதிருப்தி இருந்ததாகவும் இதன் காரணமாக சுட்டுக்கொன்றதாகவும் அந்த நபர் கூறியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷின்சோ அபே உயிரிழப்புக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு கடும் வேதனை அளித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் அடைந்தது கடும் வேதனை அளிக்கிறது. இந்தியா - ஜப்பான் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ஷின்சோ அபேவின் பங்கு அளப்பறியது. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய பாரம்பரத்தை விட்டுச்செல்கிறார். ஜப்பான் மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story